Posts

Showing posts from February, 2021

சிறுநீரகம் - உடலின் கழிவுத் தொழிற்சாலை!

Image
        டாக்டர் கு. கணேசன், ராஜபாளையம்.             நெஞ்சில் வலி வந்தால், “எதுக்கும் ஒரு இசிஜி எடுத்துக்கோ… மாரடைப்பு ஏதாவது இருந்துடப் போகுது” என அக்கறையோடு சொல்வதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். வயிற்றில் வலி வந்தால், “எண்டோஸ்கோப்பி பார்த்துக்கொள்வது நல்லது… அல்சராக இருக்கும்” என்று யோசனை சொல்வதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள். இதுபோல் முதுகில், விலாவில் வலி வந்தால், “அது வாய்வாகத்தான் இருக்கும். பூண்டு சாப்பிடு. சரியாகிவிடும்” என்றுதான் நெருங்கியவர்கள் சொல்வார்களே தவிர, “வயிற்றை ஸ்கேன் எடுத்து சிறுநீரகம் (Kidney) சரியா இருக்கான்னு பார்த்துக்கோ..” என ஆத்ம நண்பர்கூட ஆலோசனை சொல்லமாட்டார். காரணம், நம் மக்களிடம் இதயம் மற்றும் இரைப்பையைத் தெரிந்த அளவுக்குச் சிறுநீரகம் குறித்த விழிப்புணர்வு அவ்வளவாக இல்லை. படித்த ஆண்களுக்கேகூட சிறுநீரகம் எங்கே இருக்கிறது என்கிற விவரம் தெரியாது! சிறுநீர் வெளியேறுகிற உறுப்பைச் சுற்றி இருக்கும் விரைகளையே (Testes) சிறுநீரகங்கள் என்று கருதுபவர்கள்தான் அதிகம்! இதயம் ஒரு பம்ப், மூளை ஒரு கம்ப்யூட்டர், நுரையீரல் ஒரு காற்று இயந்திரம் என்று வர்ணித்தால் சிறுநீரகம் ஒரு ஃபி