Posts

Showing posts from March, 2021

சிறுநீர்த் தொற்று சிறுநீரகத்துக்கு வேட்டு!

Image
       டாக்டர் கு. கணேசன்         சி றுநீரகத்துக்கு சிக்கலை உண்டாக்கும் பாதிப்புகளில் பிரதானமானது, சிறுநீர்த் தொற்று. இது, தொட்டில் குழந்தை முதல் படுக்கையில் கிடக்கும் பாட்டனார் வரை எல்லோரையும் பாதிக்கிறது.  உடலில் சிறுநீர் வரும் பாதையில் சிறுநீரகம், சிறுநீர் இறக்குக் குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீர் வெளியேறும் வழி என நான்கு பகுதிகள் உண்டு. அந்த இடங்களில் பாக்டீரியா தாக்கும்போது சிறுநீர்த் தொற்று (Urinary infection) ஏற்படுகிறது.         உடலின் உள்ளிருந்து, வெளியிலிருந்து என இரண்டு வழிகளில் இது பெறப்படுகிறது. உடம்புக்குள் ‘உலா’ வரும் பாக்டீரியாக்கள் சிறுநீரகத்தைப் ‘பார்க்க’ வரும்போது அது ‘பிடித்துப்போய்’ அங்கேயே தங்கிவிடுவது முதல் வகை. அழையாத விருந்தாளி வீட்டுக்கு விசிட் செய்வதுபோல், சிறுநீர் வெளியேறும் துவாரம் வழியாக வெளியிலிருந்து பாக்டீரியாக்கள் சிறுநீர்ப் பாதைக்குள் நுழைவது இரண்டாவது வகை. இதுதான் பலருக்கும் ஏற்படும் பொதுவான வகை. ஆண்களைவிட பெண்களுக்கு இது அதிகம். எப்படி? பெண்களின் உடலமைப்பு அப்படி! பெண்களுக்குச் சிறுநீர் வெளியேறும் இடத்துக்கு அருகிலேயே ஆசனவாயும் இருக்கிறது. ஆசனவாய் என்