Posts

Showing posts from November, 2020

மூட்டுப் பிரச்சினை அறிவது எப்படி?

Image
    டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம்.   மூட்டுவலியில் பல தினுசு உண்டு. பாதிக்கப்படும் திசுவுக்கு எது எதிரியாகிறதோ, அதைப் பொறுத்து அதன் பெயர் மாறும். வயதானதும் எலும்புகளில் அழற்சி உண்டாகி உரசத்தொடங்கும்போது ஏற்படும் மூட்டுவலிக்கு ‘ஆஸ்டியோ ஆர்த்தரைடிஸ்’ (Osteo arthritis) என்று பெயர். உடலில் யூரிக் அமிலம் அதிகமாகும்போது வரும் மூட்டுவலி ‘கவுட் ஆர்த்தரைடிஸ்’ (Gout arthritis). அந்நிய உணவுகளின் ஆதிக்கம் பரவலானதும் நம்மை அதிகம் ஆக்கிரமித்துக்கொண்ட மூட்டுவலி இது. இது எதனால் வருகிறது? நாம் சாப்பிடும் அதிகப்படியான இறைச்சி அயிட்டங்கள்தான் இந்த நோயை வளர்க்கும் உரங்கள். இவற்றிலுள்ள பியூரின் சத்து செரிக்கப்படும்போது யூரிக் அமிலம் உற்பத்தியாகிறது. இந்தக் கழிவுப்பொருள் சிறுநீரில் வெளியேறுவது வழக்கம். சமயங்களில், சில நொதிகள் சிதைவதால் இது அதிகமாகச் சுரந்துவிடும். இப்படியும் இருக்கலாம்….. சிறுநீரகப் பாதிப்பின்போது சிறுநீரகம் இதை வெளியேற்ற சண்டித்தனம் செய்யும். இதனால், இந்த அமிலம் ரத்தத்தில் தேங்கும். இது கொஞ்ச நாள் உடலுக்குள் ஊர்வலம் போகும். ஒரு கட்டத்தில் அது போரடித்துவிடும். நிரந்தரமாக ‘கேம்ப்’ போட இடம்

வெளிநாட்டு கரோனா தடுப்பூசிகள் இந்தியா வருமா?

Image
  இன்று (19.11.2020) வந்துள்ள ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் தலையங்கம் பக்கத்தில் என் கட்டுரை: டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம். உலக அளவில் கரோனாவை எதிர்கொள்வதற்கான தடுப்பூசியைக் கொண்டுவருவதில் வளர்ந்த நாடுகள் போட்டி போடுகின்றன. தற்சமயம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவேக்சின், ஜைகோவ்-டி ஆகிய இரண்டு தடுப்பூசிகளைச் சேர்த்து 11 ‘சோதனைத் தடுப்பூசிகள்’ 3-ம் கட்ட ஆய்வில் உள்ளன. இந்தியத் தடுப்பூசிகளுக்கு 50% பலன் கிடைத்தாலே போதும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அறிவித்துள்ள நிலையில்,  அமெரிக்க கரோனா தடுப்பூசி 90% பலன் தருவதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.   அதைத்   தொடர்ந்து    ரஷ்யாவின்  ‘ ஸ்புட்னிக் - வி ’  தடுப்பூசி  92%  பலன்   தருவதாக   அந்த   நாடு   அறிவித்தது .  இந்த   வாரம் ,  அமெரிக்காவின்   மாடர்னா   நிறுவனம்   தயாரித்துள்ள  ‘ எம்ஆர்என்ஏ -1273’ (mRNA-1273)  தடுப்பூசி  94.5%  செயல்திறன்   கொண்டுள்ளதாகத்   தெரிவித்திருக்கிறது.   இந்தச் சூழலில், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் ரந்தீப் குலேரியா, ‘வெளிநாட்டு கரோனா தடுப்பூசிகள் இந்தியத் தடுப்பூசிகளைவிடத் தர

மூட்டுவலிக்கு முகாந்திரம்!

Image
                             டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம்.     இந்தியா வில் தொற்றாநோய்க் கூட்டத்தில் இணைந்துள்ள மற்றொ ரு நோய், மூட்டுவலி. “உட்கார்ந்தா எழுந்திருக்க முடியல… எழுந்தா உட்கார முடியல…சப்பணம் போடமுடியல… மாடிப்படியில் ஏற முடியல… மூட்டுவலி ஆளைக் கொல்லுது” என்று வேதனையுடன் முணுமுணுப்போர் முப்பதிலிருந்து நாற்பது கோடிப் பேர் . இந்த விஷயத்தில் ஆண்களைவிட பெண்களிடம்தான் முணுமுணுப்பு அதிகம். அதிலும் நம் தாத்தா காலத்தில் 60 வயதில் தொடங்கிய மூட்டுவலி தற்போது 30 வயதில் தொல்லை செய்கிறது என்பதுதான் வேதனையின் உச்சம்; நவீன வாழ்வியல் தந்திருக்கும் ஓர் அச்சம் என்றும் இதைச் சொல்லலாம்.      மூட்டுவலி என்பது உடலில் எந்த மூட்டிலும் ஏற்படக்கூடியதுதான். என்றாலும், முழங்கால் மூட்டில் ஏற்படும் வலியைத்தான் பொதுவாக ‘மூட்டுவலி’ (Osteoarthritis) என்கிறோம். காலில் உள்ள முக்கியமான ஜங்ஷன் முழங்கால் மூட்டு. நடக்கும்போது, ஓடும்போது, மாடிப்படி ஏறும்போது, உட்காரும்போது, எழுந்திருக்கும்போது, நடனம் ஆடும்போது என சகல அசைவுகளின்போதும் உடல் எடையைத் தாங்கும் முதன்மையான மூட்டு இது. மற்ற மூட்டுகளோடு ஒப்பிட

பண்டிகையைப் பாதுகாப்புடன் கொண்டாடுவோம்!

Image
  இன்று (09.11.2020) வந்துள்ள ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் தலையங்கப் பக்கத்தில் என் கட்டுரை:   பண்டிகையைப் பாதுகாப்புடன் கொண்டாடுவோம்! டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம். பண்டிகைக் காலம் இது. எங்கு திரும்பினாலும் தள்ளுபடி, இலவசம், விலைக் குறைப்பு என வணிக வளாகங்கள் களைகட்டியுள்ளன. கரோனா பெருந்தொற்றுக்குப் பயந்து, 7 மாதங்களாக வீட்டில் அடைந்துகிடந்த மக்கள் பண்டிகையைக் கொண்டாடும் முனைப்பில் வெளியில் வந்திருக்கின்றனர். ‘பண்டிகைக் காலங்களில் கரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கும். கரோனா தொற்றைத் தடுக்கும் பாதுகாப்பு நெறிமுறைகளை மக்கள் மறந்துவிடக்கூடாது’ என்று பிரதமர் நரேந்திர மோடியும் ஒன்றியச் சுகாதாரத் துறை அமைச்சரும் எச்சரித்துள்ளனர்; அண்மையில் கேரளாவில் ஓணம் பண்டிகையின்போது பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்கத் தவறியதால் அங்கு கரோனா கட்டுக்கடங்காமல் பரவியுள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாடு முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகை நெருங்கும் நேரத்தில் இந்த எச்சரிக்கை நம் கவனத்தைப் பெறுகிறது. முகக்கவசம் முக்கிய ஆயுதம் முன்பு பண்டிகை என்றதும், பட்டாசுப் ப

இரண்டாம் கொரோனா அலை வருமா?

Image
          இரண்டாம் கொரோனா அலை வருமா?   டாக்டர் கு. கணேசன் ,    இ ராஜபாளையம் . கொ ரோனா தொற்று தமிழகத்தில் குறைந்து வரும் சூழலைத் தொடர்ந்து, தமிழக அரசு பள்ளிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், கோயம்பேடு சந்தை ஆகியவற்றைத் திறக்க முடிவெடுத்துள்ள இந்த நேரத்தில் ‘இரண்டாம் கொரோனா அலை வீசுமோ’ எனும் அச்சம் பொதுநலவாதிகளிடம் பரவலாகி இருக்கிறது. என்ன காரணம்? தொற்று அலைகள் மூன்றுவிதம் ஒரு பெருந்தொற்றுப் பரவலில் 3 அலைகள் உண்டு. முதன்முதலாக ஒரு தொற்று தொடங்கி நாடு முழுவதுமோ, உலக நாடுகளிலோ அது பரவுவது முதல் அலை. கடந்த 7 மாதங்களாக நாட்டில் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று, முதல் அலையைச் சேர்ந்தது. அடுத்து, அந்தத் தொற்றின் பாதிப்புகள் படிப்படியாகக் குறைந்து, தொற்றுப் பரவலும் குறைந்து வரும் நேரத்தில், மறுபடியும் அது வீரியம் பெற்று, முன்பைவிட அதிக அளவில் பரவுவதை இரண்டாம் அலை என்கிறோம். உலகில் 1918ம் ஆண்டில் 5 கோடி மக்களைப் பலி வாங்கிய ‘ஸ்பானிஸ் ஃபுளு’ மார்ச்சில் முதல் அலையாகவும் செப்டம்பரில் இரண்டாம் அலையாகவும் பரவியதை இங்கு நினைவு கூறலாம். அதே தொற்று நன்றாகக் கட்டுக்க