Posts

Showing posts from October, 2020

கழுத்துவலியும் காணாமல் போகும்!

Image
        டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம்.     க ழுத்துவலிக்குப் பல காரணங்கள் பார்த்தோம். அந்தக் காரணங்களை அகற்றினால் போதும், கழுத்துவலி காணாமல் போகும். சாதாரண வலி மாத்திரைகளுக்குக் கழுத்துவலி கட்டுப்படவில்லை என்றால், குடும்ப மருத்துவரைப் பாருங்கள். கழுத்துக்கு எக்ஸ்-ரே எடுங்கள். கைக்கும் வலி பரவுகிறது என்றால், சி.டி.ஸ்கேன்/எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுப்பது அவசியம். 40 வயதைக் கடந்தவர்களுக்கு இ.சி.ஜி.யும் தேவை. காரணம் தெரிந்து சிகிச்சை எடுத்தால் சீக்கிரம் இது சரியாகும். ‘முறையான’ சிகிச்சை எது? வலி ஊசிகள்/மாத்திரைகள் அவசரத்துக்கு உதவும். ஆனால், அவை அடிக்கடி வேண்டாம். அப்புறம் சிறுநீரகம் கோபித்துக்கொள்ளும்! கழுத்துவலிக்கு ‘பிசியோதெரபி’தான் சிறந்த சிகிச்சை. அதில் பல விதம் உண்டு. எலும்பு இடை வட்டு பிரச்சினை உள்ளவர்களுக்கு நுண்ணொலி சிகிச்சை (Ultrasonic therapy) உதவும். வலிக்கின்ற இடத்தில் ‘மின் ஒத்தடம்’ கொடுக்கும் சிகிச்சை இது. வலி உடனே கட்டுப்படும். ஜவ்வு நசுக்கல் பிரச்சினை ‘உடன்பிறப்பாக’ இருந்தால், டிராக்ஷனும் ‘டென்ஸ்’ சிகிச்சையும் (TENS therapy) தேவைப்படும். மோசமான சாலைகளில் பயணம் செய்பவ

கழுத்தில் வலி வந்தால் மாரடைப்பா?

Image
                டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம்.        அந்தத் தொழிலதிபருக்கு 50 வயது. வெளியூர்களுக்கு அடிக்கடி காரில் பயணம் செய்வார். டிரைவர் இருந்தால்கூடப் பாதி தூரம் அவரும் கார் ஓட்டுவார். அதில் ஒரு சுகம் அவருக்கு! ஒருநாள் காலையில் அவர் எழுந்திருக்கும்போது கழுத்தைத் திருப்பமுடியவில்லை. வலி கொன்றது. அவர் அதை ‘சுளுக்கு’ என நினைத்துக் கொண்டார்; தைலங்களைத் தடவினார்; களிம்புகளைப் பூசினார்; தலையணையை மாற்றினார்; எண்ணெய் மசாஜ் செய்தார். எதிலும் பலனில்லை. என்னிடம் வந்தார். எக்ஸ்-ரேயில் எலும்பில் பிரச்சினை தெரிந்தது. வழக்கமான வலிக் கொல்லிகளுடன் ‘டிராக்ஷன்’ போட்டுக்கொள்ளச் சொன்னேன். வலி விடை பெற்றது. அதற்குப் பிறகு   அவர் சிகிச்சைக்கு வரவில்லை. ஆனால், அவருக்குக் கழுத்துவலி அவ்வப்போது வருவதாகவும், அப்போதெல்லாம் வீட்டில் அவராகவே டிராக்ஷன் போட்டுக்கொள்வதாகவும் பொது நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தபோது சொன்னார்.   அடுத்த சில வாரங்களில் என்னை அலைபேசியில் அழைத்தார். “டாக்டர்! நடுராத்திரியில் இருந்தே கழுத்தில் கடுமையான வலி! காலையில் வழக்கம்போல் டிராக்ஷன் போட்டுக்கொண்டேன். ஆனாலும், வலி விட்டபாடி

கழுத்துவலிக்குக் காரணம்!

Image
                            டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம்.     முப்பது வருடங்களுக்கு முன்பு பட்டிதொட்டி எங்கும், ஆணும் பெண்ணும் தலையில் மண் கூடை, சாந்துச் சட்டி, தண்ணீர்க் குடம் சுமந்தார்கள்; களத்தில் தானிய மூட்டைகளைத் தூக்கினார்கள்; குளம், குட்டை, ஆற்றுக்குத் துணி மூட்டையைக் கொண்டுபோய்த் துவைத்தார்கள் ; திருவிழாவுக்குச் செல்லும்போது, குழந்தைகளைத் தோளில் தூக்கிக் கொண்டார்கள். ஆனால், அப்போதெல்லாம் அவர்கள் கழுத்துவலி வந்து அதிகம் கஷ்டப்பட்டதாகத் தெரியவில்லை; கழுத்தில் ‘காலர்’ கட்ட வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. ‘நவீனத் தொழில்நுட்பம்’ என்னும் பெயரில் வீடு, வயல், ஆலை, அலுவலகம், வேலை சார்ந்த இடம் எனச் சகலத்திலும் ‘மெஷின்’கள் வந்து உட்கார்ந்து கொண்டதும், தலைச்சுமை வேலைகள் ரொம்பவே குறைந்துவிட்டன. ஆனாலும், இப்போதுதான் கழுத்தில் வலி வந்து ‘காலர்’ கட்டிக் கொண்டவர்களை அதிகம் காண்கிறோம். என்ன காரணம்? காட்டு வேலை, கட்டிட வேலை, ரோட்டு வேலைக்குச் செல்கிறவர்கள் தொடங்கி, வீட்டுப் பெண்கள், பதின்பருவத்தினர், அலுவலகம் செல்கிறவர்கள்வரை இன்றைய இளைஞர்களில் 75% பேர் கழுத்துவலிக்கு சிகிச்சை எட